தென்காசி மாவட்டத்தில் 17ம்தேதி ஜமாபந்தி துவக்கம்

தென்காசி, ஜூன் 13: தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் 1435 (2025-2026)ம் பசலிக்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) வரும் ஜூன் 17, 18, 19, 23, 24 ஆகிய நாட்களில், தென்காசி வட்டத்தில் மாவட்ட கலெக்டர் தலைமையிலும், திருவேங்கடம் வட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலும், ஆலங்குளம் வட்டத்தில் தென்காசி சப் கலெக்டர் தலைமையிலும், சிவகிரி வட்டத்தில் சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலும், வீரகேரளம்புதூர் வட்டத்தில் உதவி ஆணையர்(கலால்) தலைமையிலும், செங்கோட்டை வட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) தலைமையிலும், சங்கரன்கோவில் வட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(நிலம்) தலைமையிலும், கடையநல்லூர் வட்டத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையிலும் நடைபெற உள்ளது. எனவே, பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு நேரில் சென்று தங்களது கோரிக்கை மனுக்களை வருவாய்த் தீர்வாய அலுவலரிடம் அளித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார். பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த

அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி ஊக்கதொகை செங்கோட்டை, ஜூன் 13: ஏவிகே கல்வி குழும தலைவர் அய்யாத்துரைப்பாண்டியன் ஆண்டுதோறும் ஏழை எளிய மாணவ, மாணவிகளை கல்வி கற்க ஊக்குவிக்கும் வகையில் 10, 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கி வருகிறார். இந்த ஆண்டு (2025-26) இதற்கான பிரம்மாண்ட விழா சங்கரன்கோவிலில் உள்ள ஏ.ஏ.ஆர் மஹாலில் வைத்து வரும் 14ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில் தென்காசி மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்க தொகைகளை அய்யாத்துரைபாண்டியன் வழங்கி பாராட்டுகிறார். ஏற்பாடுகளை அய்யாத்துரைப்பாண்டியன் பேரவையினர் செய்து வருகின்றனர்.

Related Stories: