தென்மண்டலத்தில் 42 இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்

மதுரை, ஜூன் 13: தென்மண்டலத்தில் இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து தென்மண்டல ஐஜி உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் மாவட்டம், திருச்சுழியில் பணிபுரிந்து வந்த இன்ஸ்பெக்டர் பூமிநாதன், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பணிபுரிந்து வந்த இன்ஸ்பெக்டர் வசந்தா, தாண்டிக்குடியில் பணிபுரிந்து வந்த இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், ராமநாதபுரம் மாவட்டம், கமுதி மதுவிலக்கு மற்றும் அமலாக்கப்பிரிவில் பணிபுரிந்து வந்த இன்ஸ்பெக்டர் வீரலஷ்மி உட்பட 16 பேர் தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களிலிருந்து மதுரை மாநகருக்கும், மதுரை, தேனி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிந்து வந்த 26 பேர் பல்வேறு தென் மாவட்டங்களுக்கும் பணியிட மாற்றம் செய்து, தென் மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி உத்தரவிட்டுள்ளார்.

 

Related Stories: