×

எப்போதும்வென்றான் அருகே மாணவரிடம் செல்போன் பறித்த 3 வாலிபர்கள் கைது

ஓட்டப்பிடாரம், ஜூன் 13: எப்போதும்வென்றான் அடுத்துள்ள கீழச்செய்தலை கிராமத்தை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவர் மற்றும் அவரது நண்பரும் கடந்த மே 17ம் தேதி கீழச்செய்தலை விலக்கில் இருந்து ஊருக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது 2 பைக்குகளில் வந்த 3 வாலிபர்கள், 12ம் வகுப்பு மாணவரை மிரட்டி அவரிடம் இருந்த செல்போனை பறித்து சென்றனர். இதுகுறித்து மாணவர், எப்போதும்வென்றான் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் உமாமகேஸ்வரி வழக்கு பதிந்து விசாரணை நடத்தினார். இதில் செல்போனை பறித்து சென்றது, தூத்துக்குடி தாளமுத்துநகரை சேர்ந்த இளங்கோவன் மகன் முத்துச்செல்வம்(19), சாத்தையா மகன் இசக்கிமுத்து(19), ரமேஷ்குமார் மகன் தமிழரசன்(21) என்பது தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார், செல்போன் மற்றும் 2 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

Tags : Eyivvenran ,Ottapidaram ,Keezhacharitlai ,
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பஞ்சு மில்லில் பயங்கர தீ விபத்து