சாத்தான்குளம், ஜூன் 13: சாத்தான்குளம் நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் தென்மேற்கு பருவமழைக்கு முன்னேற்பாடு தயார் செய்யப்பட்டுள்ளதை உதவி கோட்ட பொறியாளர் கோமதி சங்கரி பார்வையிட்டார். சாத்தான்குளம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் தென்மேற்கு பருவமழைக்கு முன்னேற்பாடு பணிகளை தற்போதே தீவிரப்படுத்தி வருகிறது. நெடுஞ்சாலைத்துறை உயரதிகாரிகள், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் விஷூ மகாஜன் ஆகியோர் உத்தரவின் பேரில், தூத்துக்குடி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ஜெயப்பிரகாஷ் ஆலோசனைப்படி சாத்தான்குளம் உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் உள்ள காலியிடத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில் முன்னேற்பாடாக 2000 மணல் மூட்டைகள், 5 ஜெனரேட்டர், மரம் அறுக்கும் இயந்திரம், சட்டி, அரிவாள், சேப்டி பெல்ட், சவுக்கு கம்புகள் உள்ளிட்ட இதர உபகரணங்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த பொருட்களை சாத்தான்குளம் உதவி கோட்ட பொறியாளர் கோமதி சங்கரி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இளநிலை பொறியாளர் சிவசண்முகநாதன், சாலை ஆய்வாளர்கள் ஆ.முருகன், ஊ.முருகன், லட்சுமணன், சின்னத்துரை, கணேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
