×

வருகிற 16, 17ம் தேதி எம்எல்ஏக்களுக்கு புத்தாக்க பயிற்சி: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அழைப்பு

சென்னை: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் நேற்று தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: தவெக ஆட்சி அமைந்த பிறகு தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் வரும் 18ம் தேதி கவர்னர் உரையுடன் துவங்க உள்ளது. அதன்படி, 17வது சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்களுக்கு வரும் ஜூன் 16 மற்றும் 17 ஆகிய இரண்டு நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை புத்தாக்க பயிற்சி சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது. முதல்வர் விஜய் இந்த பயிற்சியை துவக்கி வைக்கிறார்.

அதிமுகவின் கொறடா யார் என்பது குறித்து வருகிற 18ம் தேதிக்கு முன்னதாக தெரியவரும். சட்டப்பேரவை நிகழ்ச்சியின்ேபாது வழக்கமாக ஒளிபரப்பப்பட்ட அத்தனையும் தொடரும். நீண்டநேரம் ஒளிபரப்புவது பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.

Tags : Speaker ,J.C.T. Prabhakar ,Chennai ,Tamil Nadu Legislative Assembly ,Thaweka government ,17th ,Assembly ,
× RELATED 3 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார் முதல்வர் விஜய்