கரூர்: கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம்தேதி விஜய்யின் தவெக பிரசாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. இந்நிலையில், 90 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் (11ம்தேதி) முதல் சிபிஐ அதிகாரிகள், கரூரில் தங்களின் விசாணையை துவங்கியுள்ளனர். முதல்நாளில் 5 போலீசாரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். நேற்று 2வது நாளாக இன்ஸ்பெக்டர்கள் மணிவண்ணன், சதீஸ்குமார் மற்றும் 3 பெண் எஸ்ஐக்கள் என 5 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
