சென்னை: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பட்டா வழங்குவதில் ஏற்படும் காலதாமதத்தை முற்றிலும் குறைக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அளிக்கும் பட்டா தொடர்பான மனுக்கள் 5 நாட்களுக்குள் பரிசீலனை செய்யப்படும். அதனைத் தொடர்ந்து 15 நாட்களுக்குள் இறுதி முடிவு எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
