×

ஏற்கனவே இருக்கும் ஒன்றுக்கு புது பெயர் கொடுத்து, புது சீருடை கொடுத்தால் அது புது திட்டமா.!! கனிமொழி எம்.பி கேள்வி

சென்னை: எனது தொகுதிக்கு கப்பல் கட்டும் ஆலை வருவதாக இருந்தது, ஆனால் தற்போது வரவில்லை..எனது தூத்துக்குடி தொகுதிக்கு வர வேண்டிய அந்த தொழிற்சாலை எங்கே என்று திமுக மக்களவை குழு தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கேள்வி எழுப்பி இருக்கிறார்.

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய எம்பி கனிமொழி, உங்களை விட 100 மடங்கு ஒன்றிய அரசை எதிர்த்தவர்கள் மற்றும் எதிர்த்து கொண்டிருப்பவர்கள் நாங்கள் என்று ஆளும் கட்சியை விமர்சித்தார். அதே போல திமுக ஆட்சியில் இருந்த போது, ஒன்றிய அரசு தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய நிதியை தரவில்லை.

ஆனாலும் தமிழக மக்களை பாதுகாப்பதிலே, மக்கள் நல திட்டங்களை தருவதிலே நாடு முழுவதற்கும் முன்மாதிரியாக இருந்த ஆட்சி தான் திமுக ஆட்சி. தவெக ஆட்சியில் தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இதுவரை இல்லாத அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முக்கியமாக குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க முடியாத அரசாக, தற்போதைய தவெக அரசு உள்ளது. பெண்சாலை முதன்முதலில் காவல்துறைக்கு கொண்டு வந்தது மறைந்த தலைவர் கலைஞர். அதே போல் பெண்கள் பாதுகாப்பிற்காக தனியாக ஒரு பிரிவை உருவாக்கியவர் மு.க.ஸ்டாலின். என்னென்ன திட்டங்கள் செயல்பாட்டில் இருக்கிறதென்றே தெரியாமல், புது திட்டம் என்று ஸ்டிக்கர் ஒட்டும் அரசாக, தவெக அரசு உள்ளது.

புது பெயர் கொடுத்து, புது சீருடை கொடுத்தால் அது புது திட்டமாக மாறிவிடுமா! என்று கேள்வி எழுப்பி சிங்கப்பெண் திட்டத்தை கனிமொழி விமர்சித்தார். எதற்கெடுத்தாலும் முந்தைய ஆட்சி என்று குறை சொல்வதை விட்டுவிட்டு, பெண்களுக்கானபாதுகாப்பை வழங்க உரிய நடவடிக்கை எடுங்கள் என்று வலியுறுத்தி உள்ளார்.

Tags : Kanimozhi M. ,Chennai ,Kanimozhi ,Dima Lok Sabha Committee ,Thoothukudi ,
× RELATED சொல்லிட்டாங்க…