×

எல்லாவற்றுக்கும் முந்தைய ஆட்சியை குறை சொல்லாதீங்க.! 1 மாசத்துல சட்டம் – ஒழுங்கை இன்னும் நீங்க கட்டுப்படுத்தி இருக்கணும்..

சென்னை: தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்று 1 மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், பல்வேறு பிரச்சனைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படாத நிலையே நீடிக்கிறது. அதிலும் குறிப்பாக சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இந்த 1 மாதத்தில் மிகவும் அதிகரித்துள்ளது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் தவெக அரசின் 1 மாத ஆட்சி குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், இந்த ஒரு மாதத்தில் தவெக அரசு சட்டம் ஒழுங்கை இன்னும் கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். அதே போல போதைப்பொருள் புழக்கத்தை இன்னும் கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், சிங்கப்பெண் படை துவக்கப்பட்டிருக்கிறது. எனவே இனியாவது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட வேண்டும்.

ஊழலை ஒழிக்கிறோம் என்று சொல்கிறார்களே தவிர இன்னும் கட்டுப்படுத்தப்பட வேண்டிய நிலையில் தான் அது இருக்கிறது. இதற்கு உதாரணமாக சிஎம்டிஏ வில், 15 நாளில் 300-க்கும் மேற்பட்ட அனுமதிகள் தரப்பட்டு உள்ளதை சொல்லலாம். அதே போல மின்சார துறை முறைகேடு ஒரு வாரம் கழித்து தான் சிபிசிஐடியிடம் ஒப்படைத்து உள்ளார்கள். இதில் ஏதாவது உள் நோக்கம் இருக்கிறதா! யாரையாவது காப்பாற்ற முயற்சி நடந்ததா என்பதை மக்களுக்கு விளக்க வேண்டும். இந்த புதிய அரசு, இன்னும் அதிக கவனத்துடன் ஆட்சி செய்ய வேண்டும். அனைத்துக்கும் போன ஆட்சி மீது குறை சொல்லாமல், நடக்கும் தவறுகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கி செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார்.

தவெக அரசு பதவியேற்று ஒரு மாதம் கடந்துவிட்ட நிலையில் தமிழக்தில் சட்டம்-ஒழுங்கு தொடர்பான கவலைகள், போதைப்பொருள் அச்சுறுத்தல், பெண்களின் பாதுகாப்பு, அடிக்கடி ஏற்படும் மின்தடை மற்றும் ஊழல் புகார்கள் போன்ற பல் பிரச்சனைகளுக்கு உடனடி கவனம், உரிய நடவடிக்கை தேவைப்படுகிறது என்று தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தி உள்ளார்.

 

Tags : Chennai ,Government of Taweka ,Tamil Nadu ,
× RELATED இயக்குநர் இமயம் பாரதிராஜா நல்லடக்கம்...