×

ரவீஸ்வரர் கோயில் தேர் திருவிழா அனைத்து துறை ஆலோசனை

 

 

பெரம்பூர்: வியாசர்பாடியில் சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த ரவீஸ்வரர் கோயில் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன், இக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் இந்த ஆண்டு பிரமோற்சவ திருவிழா வரும் 11ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. முக்கிய நிகழ்வான தேர் திருவிழா வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, கோயில் நிர்வாகம் சார்பில் தேர் திருவிழாவை நடத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நேற்று மாலை வியாசர்பாடி ரவீஸ்வரர் கோயிலில் நடைபெற்றது.

இதில் கோயில் செயல் அலுவலர் ஆட்சி சிவப்பிரகாசம், துணை தாசில்தார் சுரேஷ், உதவி செயற்பொறியாளர் சேகர், கோயில் மேலாளர் தனசேகர் எம்கேபி நகர் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், உபயோதாரர் செந்தில் முருகன், தவெக மாவட்ட செயலாளர் சிவா, மின்வாரிய அதிகாரிகள், குடிநீர் மற்றும் கழிவு நீர்கற்று வாரிய அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், தீயனணப்பு துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.

 

Tags : Raveeshwarar Temple Chariot Festival ,Perambur ,Raveeshwarar Temple ,Vyasarpadi ,Maha ,Brahmotsava festival ,
× RELATED ஓட்டுநர்கள், நடத்துநர்கள்...