×

பாஜ பெண் நிர்வாகியை விமர்சித்த வழக்கு திருச்சி சூர்யா ஜாமீன் கோரி மனு: காவல்துறை பதில்தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பா.ஜ. பெண் நிர்வாகியை அவதூறாக விமர்சித்த வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜ முன்னாள் நிர்வாகி திருச்சி சூர்யாவின் ஜாமீன் மனுவிற்கு பதில் அளிக்குமாறு காவல்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாஜ மாநில விளை​யாட்டு மற்றும் திறன் மேம்​பாட்​டுப் பிரிவு செய​லா​ள​ராக இருப்​பவர் அலிஷா அப்துல்​லா. இவர் குறித்து யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த பா.ஜ. முன்னாள் நிர்வாகி திருச்சி சூர்யா, தன்னை அவதூறாக விமர்சித்ததாக அலிஷா அப்துல்லா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கடந்த 4ம் தேதி திருச்சி சூர்யாவை கைது செய்து சிறையிலடைத்தனர். இந்நிலையில், தனக்கு ஜாமீன் கோரி, திருச்சி சூர்யா சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், யூடியூப் நிகழ்ச்சியில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மட்டுமே பதிலளித்ததாகவும், அப்பாவியான தன் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார்.இந்த மனுவை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன், மனு குறித்து காவல்துறை வரும் 10ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணை தள்ளிவைத்தார்.

Tags : Trichy Surya ,BJP ,Chennai ,Chennai Principal Sessions Court ,BJP State Sports and Skill Development Board… ,
× RELATED ரயில்வே மேம்பால பணிக்காக முன்...