- டாஸ்மாக்
- பா.ம.க.
- ஜனாதிபதி
- Srikanthi
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கரடிப்பாக்கம்
- திருவேணைநல்லூர்
- விழுப்புரம் மாவட்டம்
சென்னை: பாமக செயல் தலைவர் ஸ்ரீகாந்தி வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களின் கடும் எதிர்ப்பை மீறி செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே கரடிப்பாக்கம், கள்ளக்குறிச்சி மாவட்டம் பெரிய சிறுவத்தூர் பள்ளி அருகே அமைந்துள்ள டாஸ்மாக் கடை மற்றும் திருநாவலூர் பகுதியில் பொதுமக்களின் நடைபாதையை ஆக்கிரமித்து செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி ஒரே நாளில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.
இந்த போராட்டங்களில் பெண்கள், இளம் பெண்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்று, மக்கள் வாழ்வுக்கும் மாணவர்களின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக உள்ள டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். எனவே, பொதுமக்கள் எதிர்ப்புக்குள்ளாகி வரும் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் உடனடியாக அகற்றவும், மூடப்பட்ட கடைகளின் பட்டியலை வெளியிடவும், போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறவும் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
