×

சென்னையில் பொதுப்போக்குவரத்தை நவீனப்படுத்த 750 இ-பஸ்கள் கூடுதலாக விரைவில் இயக்கம்: பணிமனை மேம்பாட்டு பணிகள் தீவிரம்

சென்னை: பொதுப்போக்குவரத்தை நவீனப்படுத்தவும், காற்று மாசைக் கட்டுப்படுத்தவும் கூடுதலாக 750 மின்சார பஸ்களை விரைவில் இயக்க திட்டமிட்டிருப்பதாக போக்குவரத்து அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாநகர் போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழக அரசின் மின்வாகன கொள்கையின்படி, வரும் 2030க்குள் அரசு போக்குவரத்து கழகங்களின் மொத்த பேருந்துகளில் 30 சதவீதத்தை மின்சார வாகனங்களாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக சென்னையில் மின்சார பேருந்து சேவையை விரிவுப்படுத்தும் நோக்கில் மின்சார பேருந்துகளை இயக்கவும், பராமரிக்கவும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன. அதிவேக சார்ஜிங் வசதி கொண்ட பிரத்யேக மையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல்கட்டமாக மின்சார பேருந்து பணிமனையாக மாற்றப்பட்டவியாசர்பாடி, பெருங்குடி, பூந்தமல்லி, தண்டையார்பேட்டை மற் றும் மத்திய பணிமனைகள் மின்சார பேருந்து சேவைக்கேற்ப மேலும் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன.

தொடர்ந்து, ஆலந்தூர், மத்திய பணிமனை2, ஆவடி, படிய நல்லூர், பெரம்பூர், அய்யப்பன்தாங்கள், கே.கே.நகர் ஆகியபணி மனைகளை மின்சார பேருந்துகளை இயக்கும் வகையிலான கட்டமைப்பு களுடன் கூடிய பணிமனைகளாக மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விரைவில் திட்டமிட்டப்படி 750 மின்சார பேருந்துகள் பயன்பாட்டிற்கு வரும் அதற்குள் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு இந்த பணிமனைகள்பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். மெலும், சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களுடன் இணைப்பை மேம்படுத்தும் வகையிலும் சிறிய ரக மின்மின்சார பேருந்துகளையும் விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Chennai ,Municipal Transport Corporation ,Tamil Nadu government ,
× RELATED திருச்செந்தூரை தொடர்ந்து...