தேர்தலில் நாங்கள் தோற்றுதான் போனோம் ஆனால் இறக்கவில்லை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

 

சென்னை: தேர்தலில் நாங்கள் தோற்றுதான் போனோம் ஆனால் இறக்கவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி அளித்துள்ளார். வாழ்க்கையில் எத்தனையோ இழப்புகளை பார்த்த எங்களுக்கு எத்தனை விஜய் வந்தாலும் கவலையில்லை. கருத்து வேறுபாட்டால் மாற்றுக் கட்சிக்கு சென்றவர்கள், தெளிவு கிடைக்கும்போது மீண்டும் வருவார்கள்.

விஜய்யின் தவெக கட்சி வேண்டாம் என்று 65 சதவீத மக்கள் மற்ற கட்சிகளுக்கு வாக்களித்துள்ளனர். அதிகாரத்தில் இருப்பதால் நீங்கள் ஆடு புலி ஆட்டம் ஆடிக் கொண்டிருக்கிறீர்கள். வாழ்க்கை என்பது ஒரு வட்டம், இதுதான் இயற்கை நீதி என்று ஆர்.பி.உதயகுமார் கருத்து தெரிவித்துள்ளார். ஒரு லெட்டர் பேடு கட்சி கூட தவெகவை நம்பி செல்லவில்லை. மாயாஜாலம் போல் தவெகவுக்கு ஆட்சி, அதிகாரம் கிடைத்துள்ளது.

மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தவெக அரசின் அடுத்த கட்ட நகர்வு மர்மமாக உள்ளது. அதிமுக வெற்றி பெற்றிருந்தால், பல கட்சிகள் மாறிய நிர்மல்குமார் இங்கு வந்திருப்பார். கரூரில் 41 பேர் உயிரிழந்தபோது ஓடி ஒளிந்து கொண்டார் முதலமைச்சர் விஜய். விஜய்யின் பேச்சு ஆணவ பேச்சு, அவருக்கு வரலாறு தெரியாது; தியாகம், போராட்டம் எதுவும் இல்லாமல் வந்துவிட்டார். கைக்கூலிகளை வைத்துக் கொண்டு ஆள்பிடிக்கும் வேலையை செய்கிறார் விஜய். அதிமுகவினரை இழுக்கும் வேலைகளை செய்தால் விஜய் கடும் விளைவுகளை சந்திப்பார் என்று ஆர்.பி.உதயகுமார் பேட்டி அளித்துள்ளார்.

Related Stories: