நாங்குநேரி அருகே 85 கிலோ புகையிலை பொருட்களை பதுக்கிய வாலிபர் கைது

நெல்லை, ஜூன் 6: நெல்லை மாவட்டம், நாங்குநேரி எஸ்ஐ ஆபிரகாம் மற்றும் போலீசார் சூரங்குடியில் இருந்து ஏர்வாடிக்கு செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் ஏர்வாடியை சேர்ந்த சுரேஷ் (39) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் கையில் வைத்திருந்த பையை சோதனையிட்டனர். இதில் அந்த பையில் அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 85 கிலோ புகையிலைப் பொருட்கள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த போலீசார், சுரேசை கைதுசெய்தனர். மேலும் அவரிடமிருந்த 85 கிலோ புகையிலைப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories: