சங்கரன்கோவில், ஜூன் 6: சங்கரன்கோவில் கோட்ட செயற்பொறியாளர் (பொ) முஜீப் ரஹ்மான் வெளியிட்ட செய்தி குறிப்பு: சங்கரன்கோவில், பெருமாள்பட்டி உபமின் நிலையத்தில் இன்று (6ம்தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. எனவே சங்கரன்கோவில் நகர்பகுதி, என்.ஜி.ஓ.காலனி, களப்பாகுளம், புளியம்பட்டி, வாடிக்கோட்டை, பெரியூர். மணலூர், பெரும்பத்தூர், இராமலிங்கபுரம், வடக்குபுதூர், நகரம், முள்ளிகுளம், சீவலராயனேந்தல், பெருங்கோட்டுர், அழகாபுரி ஆகிய ஊர்களுக்கும், பெருமாள்பட்டி, மாங்குடி, இனாம் கோவில்பட்டி, அருகன்குளம்புதூர், செந்தட்டியாபுரம், எட்டிச்சேரி, தென்மலை, அ.சுப்பிரமணியாபுரம், இடையான்குளம், முறம்பு, ஆசிலாபுரம். கூனங்குளம், பருவக்குடி, பந்தபுளி, பி.ரெட்டியாபட்டி, தெற்கு வெங்காநல்லுார், சோலைச்சேரி, வேலாயுதபுரம் ஊர்களுக்கும் மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
