சுரண்டை, ஜூன் 6: சுரண்டை அருகே சாம்பவர்வடகரையில் பைக்கில் சென்ற டிரைவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். சுரண்டை அருகேயுள்ள சாம்பவர்வடகரை மாதாங்கோவில் தெருவை சேர்ந்த அங்கப்பன் மகன் சுப்பிரமணி என்ற அருண் (25). இவர் டிரைவர் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சாம்பவர்வடகரை பெரியகுளம் மெயின் ரோட்டில் பைக்கில் சென்றார்.
அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதியதில் அருண் தூக்கி வீசப்பட்டார். அவ்வழியாக சென்றவர்கள் படுகாயமடைந்த அருணை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக தென்காசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து சாம்பவர்வடகரை சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
