×

மதுக்கரையில் இன்று மின் தடை

கோவை, ஜூன் 6: கோவை குனியமுத்தூர் தெற்கு மின்பகிர்மான வட்டம் செயற் பொறியாளர் சென்ராம் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மதுக்கரை துணை மின்நிலையத்தில் இன்று (6ம் தேதி) சனிக்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கே.ஜி.சாவடி, எம்.ஜி.ஆர்.நகர், பாலத்துறை, சுகுணாபுரம், பைப்பாஸ் ரோடு, பி.கே.புதூர், சாவடி புதூர், மதுக்கரை, காளியாபுரம், அறிவொளிநகர், எட்டிமடை, கோவைப்புதூர் ஒரு பகுதி ஆகிய இடங்களில் மின் விநியோகம் இருக்காது.

 

Tags : Madukkarai ,Coimbatore ,Senram ,Coimbatore Kuniyamuthur South Electricity Distribution Circle ,Madukkarai Substation ,
× RELATED வடகோவை ரயில்நிலைய மேம்பாட்டு பணிகள்