- திமுக
- தவேகா அரசாங்கம்
- கோயம்புத்தூர்
- வடக்கு
- மாவட்டம்
- திமுக மாணவர் பிரிவு
- வடக்கு கோயம்புத்தூர்
- மாணவர் பிரிவு
- நிலை
- துணை செயலாளர்
- வி.ஜி. கோகுல்
- அந்தோணிராஜ்
கோவை, ஜூன் 11: கோவை வடகோவை பகுதியில் கோவை வடக்கு மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாணவரணி மாநில துணை செயலாளர் வி.ஜி.கோகுல் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் அந்தோணிராஜ், துணை அமைப்பாளர் சிவக்குமார், மனோஜ்குமார், தினேஷ்குமார், ராஜ்திலக் உள்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
கலைஞரின் 103வது பிறந்த நாள் கருத்தரங்கம் தொண்டாமுத்தூர் மாவட்ட செயலாளர் ரவி தலைமையில் நடத்தப்பட உள்ளது. ‘பி.எம். ஸ்ரீ’ திட்டம், முன்மொழி கொள்கை மற்றும் வி.பி.எஸ்.ஏ போன்ற ஒன்றிய அரசின் திட்டங்களை எதிர்த்து வரும் 23-ம் தேதி நடைபெறும் கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் திரளாக பங்கேற்க தீர்மானிக்கப்பட்டது. தவெக அரசின் ஸ்டிக்கர் அரசியல், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பது மற்றும் தமிழகத்தில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகள், ஆணவப்படுகொலைகளுக்கு பதில் அளிக்காமல் இருப்பது, சிறுபான்மையினரின் வழிபாட்டு உரிமை பறிப்பு, சிபிஎஸ்இ அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள் மீது தடியடி நடத்தியது ஆகியவைக்கு தவெக அரசிற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
