×

கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு மாநில அளவில் கபடி போட்டி

 

மதுக்கரை, ஜூன் 9: முன்னாள் முதல்வர், கலைஞர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, கோவை தெற்கு மாவட்டம் குறிச்சி மேற்கு பகுதி 85 வது வார்டு சில்வர் ஜூப்ளி வீதி திமுக சார்பில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. ஆண்கள் மற்றும் மகளிர்களுக்கான கபடி போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட அணியினர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில், கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சபரி கார்த்திகேயன், குறிச்சி மேற்கு பகுதி செயலாளர் செந்தில்குமார், பொதுக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன், இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சல்மான் நாசர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Madukkarai ,Chief Minister ,Kalaignar Karunanidhi ,DMK ,Kurichi West ,85th Ward ,Silver Jubilee Road, Coimbatore South District… ,
× RELATED வடகோவை ரயில்நிலைய மேம்பாட்டு பணிகள்