×

தொடர் குளறுபடியால் பொதுமக்கள் அவதி: டிரான்ஸ்பார்மர், பீடர் பிரச்னையால் மின்தடை

கோவை, ஜூன் 13: கோவை மாவட்டத்தில் பரவலாக பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மின்தடை ஏற்பட்டு வருகிறது. வெயில் காலம் முடிந்து மழை காலம் துவங்கி விட்டது. மின் பற்றாக்குறை நிலைமை எதுவும் இல்லை என மின்வாரியம் தெரிவித்துள்ளது. ஆனால் மின் வினியோகம் மற்றும் பராமரிப்பில் தொடர்ந்து குளறுபடியும் பாதிப்பும் இருப்பதாக தெரியவந்துள்ளது. மாவட்ட அளவில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிரான்ஸ்பார்மர்கள் இருக்கிறது. இதில் பல நூறு டிரான்ஸ்பார்மர் பழுதாகி இருப்பதாக தெரிகிறது. சில டிரான்ஸ்பார்மர்களுக்கு ஆயில் ஊற்றவில்லை. சில இடங்களில் டிரான்ஸ்பார்மர் பாக்ஸ் வெடிப்பும், மின் வயரில் தீ பிழம்பும் ஏற்பட்டு வருகிறது. பீடர்கள், மின்

கம்பங்கள், மின் வயர்களும் மின் இணைப்பு பெட்டிகளும் முறையாக பராமரிக்கப்படாமல் பழுதான நிலையில் கொடுப்பதாக தெரிகிறது. கம்பங்களில் மின் ஒயர்கள் சிலந்து வலை போல் சிக்கலாக இருப்பதாக தெரிகிறது.
ஆபத்தான சூழ்நிலை, பராமரிப்பு குறைபாடு காரணமாக பல இடங்களில் மின்தடை தொடர்ந்து ஏற்பட்ட வருவதாக தெரிகிறது. கோவை மெட்ரோ பகுதியில் மின்தடை மிக அதிகமாக இருக்கிறது. ஒரு புகார் சரி செய்வதற்கு அரை மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை கால அவகாசம் தேவைப்படுகிறது. மாவட்டத்தில் தொடர்ந்து இது போன்ற நிலைமை இருப்பதால் பொதுமக்கள் தொழில் நிறுவனம் நடத்துவோர் வணிக வர்த்தக நிறுவனத்தினர் தவிப்படைந்துள்ளனர். வியாபாரம் மற்றும் தொழில் நிறுவனங்களின் உற்பத்தி பாதிப்பதாக தெரியவந்துள்ளது. இதை சரி செய்ய மின்வாரியத்தில் தீவிர நடவடிக்கை எடுக்கவில்லை. தேர்தலுக்கு பின் அதிகாரிகள் பணியிட மாற்ற பிரச்னையால் பராமரிப்பில் கவனம் செலுத்த வில்லை என கூறப்படுகிறது. கோவை மாவட்டத்தில் மின்வாரிய உயர் அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக இருக்கிறது. தலைமை பொறியாளர் உட்பட பல்வேறு பணியிடங்கள் இன்சார்ஜ் ஆக போட்டிருக்கிறார்கள்.

மாதாந்திர பராமரிப்பு பணி நடத்தும்போது உதவி பொறியாளர்கள், போர்மென்கள் களத்துக்கு சென்று ஆய்வு செய்து பிரச்னைகளை சரி செய்யாமல் விட்டு விடுவதால் மின் பிரச்சினை தொடர்வதாக தெரிகிறது.  இது தொடர்பாக கன்ஸ்யூமர் வாய்ஸ் செயலாளர் லோகு கூறுகையில், ‘‘ மின்மாற்றி, ஒயர்கள், பீடர்கள் பராமரிப்பு பணியில் பல்வேறு குறைபாடுகளை மின்வாரியம் உடனடியாக சரி செய்ய வேண்டும். சமீப நாட்களில் அதிக மின்தடை ஏற்படுகிறது. பிரச்னைகளை கண்டறிந்து அதை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் பழுது ஏற்பட்ட பின்பு சீரமைப்பு பணி நடத்தும் போது அதிக நேரம் மின்தடை செய்யப்படுகிறது. ஒரே பகுதியில் தொடர்ந்து மின்தடை நடக்கிறது. இது போன்ற குளறுபடிகளை தவிர்க்க வேண்டும், ’’ என்றார்.

Tags : Coimbatore ,Coimbatore district ,Electricity Board ,
× RELATED வடகோவை ரயில்நிலைய மேம்பாட்டு பணிகள்