சென்னை: காலை உணவுத் திட்டத்தின் ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் மேலும் 3 மாதம் ஒப்பந்தத்தை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தபோது பல ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்தங்கள் முடிவடைந்தது. அடுத்த 3 மாதத்துக்குள் புதிய டெண்டர்கள் கோரப்பட்டு புதிய ஒப்பந்ததார்கள் தேர்வு செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
