கடலூர்: கடலூர் மாவட்டம் பத்திரக்கோட்டை கிராமத்தில் விவசாயி குணசேகரன் (57) வெட்டிக் கொலை செய்யப்பட்டார். விவசாயி குணசேகரன் தனது மோட்டார் கொட்டகையில் வசித்து வந்த நிலையில் மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். குணசேகரன் உடலைக் கைப்பற்றி யார் கொலை செய்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
