ஸ்ரீபெரும்புதூரில் தனியார் தொழிற்சாலையில் பிரியாணி சாப்பிட்ட தொழிலாளர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். கெட்டுப்போன பிரியாணி சாப்பிட்டதே தொழிலாளர்கள் மயங்கியதற்கு காரணம் என மருத்துவ சிகிச்சையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கேட்டரிங் நிறுவனம் வழங்கிய பிரியாணியில் இருந்த சிக்கனில் இருந்து துர்நாற்றம் வீசியதாக தொழிலாளர்கள் புகார் தெரிவித்தும், அலட்சியமாக அதே உணவை தொடர்ந்து பரிமாறியதால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனை அடுத்து தனியார் கேட்டரிங் நிறுவனத்தை மூடி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
