×

முதல்வர் விஜய் தலைமையில் நாளை முதல் அமைச்சரவை கூட்டம்: பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல்

சென்னை: தமிழகத்தில் நடைபெற்ற சட்டபேரவை தேர்தலில் த.வெ.க வெற்றி பெற்று ஆட்சி அமைத்து முதல்வராக ஜோசப் விஜய் பொறுப்பு ஏற்றுள்ளார். இந்நிலையில், த.வெ.க அரசின் முதல் சட்டசபை கூட்டம் வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. த.வெ.க அரசின் முதல் சட்டபேரவை கூட்டத்தில், கவர்னர் அர்லேக்கர் உரையாற்ற இருக்கிறார்.

அவரது உரையை தொடர்ந்து அடுத்த 3 நாட்கள் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறும்.சட்டபேரவை கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு அமைச்சரவை கூடி விவாதிப்பது வழக்கம், அதன்படி தமிழக அமைச்சரவை நாளை ( வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

இதில் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்கின்றனர். முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்ற பின் நடக்கும் முதல் அமைச்சரவை கூட்டம் இதுவாகும். இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்பட உள்ள தொழில் முதலீடுகள் குறித்தும், கொள்கை ரீதியாக முக்கிய முடிவுகள் எடுக்கவும், மதுபான கடைகள் தொடர்பாக முடிவுகள் எடுக்கபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Tags : CM ,Vijay ,Chennai ,TDP ,Tamil Nadu assembly elections ,Joseph Vijay ,Chief Minister ,
× RELATED தவெக எம்எல்ஏ வெற்றி கொண்டாட்டத்தில்...