- முதல் அமைச்சர்
- விஜய்
- சோனியா
- ராகுல்
- தில்லி
- காங்கிரஸ்
- கிரிஷ் சோடங்கர்
- சென்னை
- காங்கிரஸ் கட்சி
- சென்னை செயலகம்
- ராஜ்ய சபா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கிரிஷ்…
சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜயை, காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் நேற்று சந்தித்தார். அப்போது தமிழகத்தில் நடைபெறும் நாடாளுமன்ற, மாநிலங்களவை இடைத்தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். பின்னர், கிரிஷ் சோடங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:
நாடாளுமன்றத்தில் இடம் பெறுவது தவெகவிற்கு முதல் வாய்ப்பு என்றாலும், இந்த இடத்தை காங்கிரசுக்கு ஒதுக்குவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக முதல்வர் உறுதி அளித்துள்ளார். முதல்வர் விரைவில் இதற்கான அறிவிப்பை வெளியிடுவார். மேலும், இந்த இடம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இதைத் தவிர வேறு எந்த விஷயத்தை பற்றியும் நாங்கள் விவாதிக்கவில்லை.
ஏனெனில், மாநிலங்களவையில் எங்களின் பலத்தை அதிகரிக்க நாங்கள் விரும்புகிறோம். எனவே, நாடாளுமன்றத்தில் எங்கள் ராஜ்யசபா பலத்தை வலுப்படுத்த வேண்டும் என்பதை நாங்களும் முதலமைச்சரிடம் வலியுறுத்தினோம். எங்கள் கோரிக்கையை தீவிரமாக பரிசீலித்து வருவதாக முதலமைச்சர் கூறினார். கோவாவை சேர்ந்த பலர் வேளாங்கண்ணிக்கு வருகை தருகிறார்கள். அங்கு தங்குமிடம் தொடர்பான சில சிக்கல்கள் உள்ளன.
எனவே, முதல்வர் விஜய் அதை பரிசீலிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொண்டேன். திமுக இன்னும் இந்தியா கூட்டணியில் தான் நீடிக்கிறது. மேலும் திமுக இந்தியா கூட்டணியின் மிக முக்கிய அங்கமாக இருந்தது. எனவே, எதிர்காலம் குறித்து இப்போது எந்த கருத்தும் கூற முடியாது.
கேரளாவில் நடந்த பதவியேற்பு விழா மற்றும் டெல்லி வந்தபோது சோனியா காந்தி, ராகுல் காந்தியை முதல்வர் சந்திக்காதது ஏன் என்று கேட்கிறீர்கள். இது குறித்து சில குழப்பங்கள் இருப்பதாக நினைக்கிறேன். சரியான நேரம் இல்லாத காரணத்தால் முதல்வர் சந்திக்காமல் டெல்லியில் இருந்து சென்றுள்ளார். மேலும், டெல்லி பயணம் குறித்து சிலர் தேவையில்லாமல் குழப்பத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
