×

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தொடர்கிறது: மாணிக்கம் தாகூர் ஒப்புதல்

விருதுநகர்: விருதுநகர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாணிக்கம் தாகூர் எம்பி செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: பாஜ மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தைரியம் உள்ளவராக இருந்திருந்தால் கட்சியில் இருந்து விலகுவதை கடிதமாக அனுப்பி இருக்கவேண்டும். அவர், ஒன்றிய அமைச்சர் அமித்ஷா அனுமதி பெறச் சென்றது சரியானதாக இல்லை.

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையே தொடர்கிறது. இதை சரி செய்வேன் என முதல்வர் ஜோசப் விஜய் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்துள்ளார். போலீஸ் துறையில் உள்ள பிரச்னைகளை சரி செய்ய முயற்சிக்கிறார். பேருந்து நிலையம், கோயில்கள், கல்வி நிறுவனங்கள் அருகே உள்ள பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடுவதாக தமிழக முதல்வர் அறிவித்தார்.

ஆனால் அகற்றாமல் இருப்பது குறித்து கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க உள்ளேன். மேகதாது அணை தொடர்பாக கர்நாடகாவில் அரசியலுக்காக பேசுகின்றனர். பெங்களுரூவில் தண்ணீர் பிரச்னையை தீர்க்க முடியாததற்கு அணை கட்டுவதை காரணமாக கூறி சமாளிக்கின்றனர். இவ்வாறு தெரிவித்தார்.

Tags : Manickam Thakur ,Virudhunagar ,Virudhunagar Congress ,BJP ,president ,Annamalai ,Union Minister ,Amit Shah ,
× RELATED தவெக எம்எல்ஏ வெற்றி கொண்டாட்டத்தில்...