×

மனைவி இறந்ததால் சோகம் 7 வயது மகனை கொன்று தந்தை தற்கொலை

நெய்வேலி: கடலூர் மாவட்டம் நெய்வேலி, வடக்குத்து அண்ணா கிராமம் அரசமர தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் மகன் ஸ்டீபன் ராஜ்(29). தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி பவித்ரா(24) என்பவர், கடந்த 2020ல் குடும்ப தகராறு காரணமாக தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர்களுக்கு யஷ்வந்த்ராஜ் (எ) ஜெகதீஷ் என்கிற 7 வயது மகன் உள்ளார். இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தார். இன்று பள்ளி திறக்க இருந்த நிலையில் 3ம் வகுப்பு செல்ல இருந்தார்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் தந்தை, மகன் இருவரும் வீட்டில் தனியாக இருந்த நிலையில், இரவில் ஸ்டீபன் ராஜ் தனது மகனுக்கு டிபன் கொடுத்து தூங்க வைத்துள்ளார். பின்னர் தானும் தூங்கிய நிலையில், நள்ளிரவில் திடீரென எழுந்த அவர், அருகிலிருந்த கத்தியால் மகனின் கழுத்தை அறுத்து துடிதுடிக்க கொலை செய்துள்ளார். பின்னர் விரக்தியில் சமையல் அறைக்கு சென்ற அவர், கயிறு மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவத்துக்கு முன்பாக தனது சகோதரிக்கு வாட்ஸ்-அப் மூலம் குறுந்தகவல் அனுப்பியிருந்த நிலையில், நேற்று அதிகாலை அதை பார்த்து படித்துவிட்டு அதிர்ச்சியடைந்த தங்கை மற்றும் உறவினர்கள் அங்கு வந்து பார்த்தபோது சிறுவன் யஷ்வந்த்ராஜ் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு கதறி அழுதனர்.

மேலும் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது சமையல் அறையில் ஸ்டீபன்ராஜ் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதுகுறித்து நெய்வேலி நகர காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தந்தை, மகன் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Neyveli ,Muthukumar ,Stephen Raj ,Cuddalore District ,Anna Village Government Street ,Bavithra ,
× RELATED தவெக எம்எல்ஏ வெற்றி கொண்டாட்டத்தில்...