- இந்து முன்னணி
- பூவுடையார்புரம்
- சாத்தான்குளம்
- சாத்தான்குளம் யூனியன்
- தூத்துக்குடி
- தென் மாவட்ட
- ரவிச்சந்தர்
- இந்து முன்னணி மாநில செயற்குழு
- சக்திவேலன்
சாத்தான்குளம், ஜூன் 4: சாத்தான்குளம் ஒன்றிய இந்து முன்னணி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் பூவுடையார்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் ரவிசந்தர் தலைமை வகித்தார். இந்து முன்னணி மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் சக்திவேலன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் ஜூன் 21ல் திருநெல்வேலியில் நடைபெறவுள்ள இந்து முன்னணி மாநில பொதுக்குழு சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது. புதிய நிர்வாகிகள் தேர்வு செய்வது என முடிவு செய்யப்பட்டது. இதில் சாத்தான்குளம் ஒன்றிய பொதுச்செயலாளர் மாயவன முத்துசாமி, ஒன்றிய செயலாளர் கலியமுத்து, ஒன்றிய துணைத்தலைவர்கள் செல்வ முத்துக்குமார், சித்திரைசெல்வன், பூஇசக்கி, ஒன்றிய செயலாளர் வெங்கட கிருஷ்ணன், இந்து முன்னணி இணையதள பொறுப்பாளர் சிவநேசன், மோடி நகர் இந்து முன்னணி பொறுப்பாளர் லெட்சுமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
