×

நாங்குநேரி அருகே கார்கள் நேருக்கு நேர் மோதலில் மதுரையை சேர்ந்தவர் பலி

களக்காடு, ஜூன் 4: மதுரை பொதும்பு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (45). கடந்த சில நாட்களுக்கு முன் இவர் மின்சாரம் தாக்கியதில் படுகாயம் அடைந்தார். இதற்காக அவர் கேரளாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று சிகிச்சைக்காக அவர் ஒரு காரில் கேரளாவிற்கு புறப்பட்டார். அவருடன் உறவினர்கள் குபேந்திரன் (40), சபரி (43), சுரேஷ் (41) ஆகியோரும் வந்தனர். காரை குபேந்திரன் ஓட்டினார். நெல்லை மாவட்டம் நாங்குநேரி டோல்கேட் அருகே வரும்போது திசையன்விளையில் இருந்து நெல்லையை நோக்கி ஒரு கார் வந்தது. அந்த காரை நெல்லையை சேர்ந்த ஐயப்பன் (36) என்பவர் ஓட்டி வந்தார் அவருடன் ஹென்றி ராஜேஷ் (48) என்பவர் உடன் இருந்தார்.

Tags : Madurai ,Nanguneri ,Kalakkadu ,Balasubramanian ,Bodumbu ,Kerala ,
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பஞ்சு மில்லில் பயங்கர தீ விபத்து