சென்னை: சென்னை ஓட்டேரி பின்னி மில்லில் வளாகத்தில் நடந்த படப்பிடிப்பின்போது சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. சிலிண்டர் வெடித்த விபத்தில் மதன்(25) என்பவர் உயிரிழப்பு மேலும் 19 பேர் காயமடைந்துள்ளனர்.
பலத்த தீக்காயமடைந்த 4 பேரை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை அனுமதித்தனர் இதில் சிகிச்சை பலனின்றி மதன் என்பவர் உயிரிழந்தார். தினகரன், சூர்யா மற்றும் சக்திவேல் ஆகிய மற்ற மூவருக்கும் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 10க்கும் மேற்பட்டோருக்கு சிறு சிறு காயங்கள் ஏற்பட்டு அவர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமணையில் சிகிச்சை பெற்று நலமாக உள்ளனர்.
நடிகர் எஸ்.ஜே. சூர்யா இயக்கி, நடிக்கும் ‘ கில்லர் படப்பிடிப்பு நேற்று இரவு முதல் நடந்துவந்துள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை ஆக்ஷன் காட்சிக்காக சிலிண்டரில் எரிவாயு மாற்றும் (rigging) பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த வெடி விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்து தொடர்பாக தற்போது ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
