மூப்படைந்து சக்கர நாற்காலியில் உட்கார்ந்த பிறகும் ஓய்வின்றி உழைத்தவர் கலைஞர்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மூப்படைந்து சக்கர நாற்காலியில் உட்கார்ந்த பின்பும் ஓய்வின்றி, தனது இறுதி மூச்சுவரை, தமிழினத்திற்காக, தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்காக உழைத்திட்ட உன்னதத் தலைவர் கலைஞர் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; என்னை என்றும் இயக்கும் தலைவர் கலைஞர் அவர்களே .வெற்றியைத் தலையிலும், தோல்வியை நெஞ்சிலும் ஏற்றாமல், சோதனைக் கடல்களைச் சோர்வின்றி நீந்திக் கடந்த உங்களது ஆற்றல் என்னிடமும் இருக்கிறது என இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: