×

கோவையில் சாக்கடை கால்வாயில் எரிந்த நிலையில் இளைஞர் உடல் மீட்பு

கோவை: கோவை சாக்கடை கால்வாயில் பாதி எரிந்த நிலையில் இளைஞர் உடல் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த அபுதாகிர் பாஷா (27) என்பது தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்ட அபுதாகிர் பாஷாவை காணவில்லை என அவரது மனைவி புகார் அளித்திருந்தார். அபுதாகிர் உடல் மீட்கப்பட்ட நிலையில் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்தனர். கொலைக்கு தொழில் போட்டி காரணமா அல்லது வேறு ஏதாவது காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

Tags : Coimbatore ,Abuthakir Pasha ,R.S. Puram ,
× RELATED கடந்த 3 ஆண்டுகளாக மே மாதத்தில்...