வீட்டில் நகை கொள்ளை

 

ராஜபாளையம், ஜூன் 2: ராஜபாளையம் அருகே உள்ள எம்.பி.கே புதுப்பட்டி சுப்புராஜ் காட்டன் மில் காலனியைச் சேர்ந்தவர் பிரவீன் பாரத்(33). டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி நந்தினி விருதுநகரில் அரசு சார்பாக இலவசமாக நடத்தப்பட்டு வரும் டிஎன்பிஎஸ்சி தேர்வு பயிற்சிக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. நந்தினி தனது வீட்டை பூட்டிவிட்டு தேர்வுக்கு படிப்பதற்காக விருதுநகர் சென்று இருந்தார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுத்தனர்.

பின்னர் அங்கு பிரோவில் வைக்கப்பட்டு இருந்த இரண்டு பவுன் தங்க நகைகளை கொள்ளை அடித்து தப்பி சென்றுவிட்டனர். இதனை அடுத்து நந்தினி வீடு திரும்பிய போது கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. அதில் இந்த நகைகள் திருடு போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Related Stories: