×

மின்தடை அறிவிப்பு இன்று அனுப்பன்குளம் மம்சாபுரத்தில் நாளை

 

சிவகாசி/வில்லி, ஜூன் 2: அனுப்பன்குளம், மம்சாபுரத்தில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகாசி மின் வாரிய அதிகாரி பாவநாசம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சிவகாசி கோட்டத்தில் உள்ள அனுப்பன்குளம் துணை மின் நிலையத்தில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வழக்கமான மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் சப்ளை ஆகும் அனுப்பன்குளம், சுந்தரராஜபுரம், மீனம்பட்டி, பேராபட்டி, சின்னகாமன்பட்டி, நாரணாபுரம், செல்லிநாயக்கன்பட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல் வில்லிபுத்தூர் மின்கோட்ட செயற்பொறியாளர் முனியசாமி கூறியிருப்பதாவது: வில்லிபுத்தூர் கோட்டத்தில் உள்ள படிக்காசுவைத்தான்பட்டி மற்றும் மம்சாபுரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும். எனவே மேற்படி துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெரும் பகுதிகளான மம்சாபுரம் ஏரியாவில் மம்சாபுரம் அனைத்து பகுதிகளுக்கும், செண்பகத்தோப்பு, புதுப்பட்டி, நிறையன்குளம், ஒத்தபட்டி, வாழைக்குளம், காந்திநகர், இடையன்குளம், படிக்காசுவைத்தான்பட்டி ஏரியாவில் வன்னியம்பட்டி, வைத்தியலிங்கபுரம், கொத்தன்குளம், வன்னியம்பட்டி வீட்டு வசதி வாரியம், ராஜபாளையம் ரோடு, கரிசல்குளம், லட்சுமியாபுரம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடைபடும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

Tags : Anupankulam, Mamsapuram ,Sivakasi ,ville ,Sivakasi Electricity Board ,Bhavanasam ,Anupankulam ,
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பஞ்சு மில்லில் பயங்கர தீ விபத்து