×

பயிர்கடனை தள்ளுபடி செய்யக் கோரி கோவில்பட்டியில் விவசாயிகள் போராட்டம்

கோவில்பட்டி, ஜூன் 2: கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கோவில்பட்டியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். விதை, உரம் ஆகியவற்றின் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி கோவில்பட்டியில் நேற்று கரிசல் பூமி விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடந்தது. சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்துக்கு சங்க தலைவர் வரதராஜன் தலைமை வகித்தார். தமாகா வடக்கு மாவட்ட தலைவர் ராஜகோபால், ஒன்றிய அதிமுக செயலாளர் தனபதி, தென்னக மானாவாரி விவசாயிகள் சங்க தலைவர் பிரேம்குமார், கரிசல் பூமி விவசாயிகள் சங்க செயலாளர் ஜெயச்சந்திரன், நவநீதன், ஆதிமூலம், பாஜ சேதுராஜ் மற்றும் திரளான விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். தொடர்ந்து அவர்கள், சப்-கலெக்டர் ஹிமான்ஷூ மங்களிடம் வழங்கிய மனு விவரம்: கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள மானாவாரி நிலத்தில் 2025-26ம் ஆண்டில் விவசாயிகள் பல்வேறு பயிர்களை பயிரிட்டிருந்தனர். போதிய மழை இல்லாததால் விளைச்சல் பாதிக்கப்பட்டது.

இதனால் கூட்டுறவு கடன் சங்கத்தில் பெற்ற பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தோம். அதன் அடிப்படையில் அரசு பயிர் கடன் தள்ளுபடியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். பயிர்க்கடன் தள்ளுபடியில் பாரபட்சமின்றி முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் விதை, உரம் விலை உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அதில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Kovilpatti ,Tamil Nadu government ,
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பஞ்சு மில்லில் பயங்கர தீ விபத்து