கணபதிபுரத்தில் கால்வாயில் வீசப்பட்ட மரக்கிளைகள் அகற்றப்படுமா?

ராஜாக்கமங்கலம், ஜூன் 2: கணபதிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சாலையோரம் நின்ற ஒரு ஆலமரத்தின் பெரிய கிளை கடந்த சில நாட்களுக்கு முன்பு முறிந்து கீழே விழுந்தது. இதனை தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் அகற்றினர். அகற்றிய மரக்கிளைகளை அருகில் உள்ள கால்வாயில் போட்டுச்சென்றனர். மரக்கிளை முறிந்து பல நாட்கள் ஆன நிலையில் கால்வாயில் போட்ட மரக்கிளைகள் அகற்றப்படவில்ைல. தற்போது மாவட்டத்தில் பரவலாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. அணையில் இருந்து நேற்று விவசாய பயன்பாட்டிற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் கால்வாய் அடைத்துள்ளதால், கால்வாயில் தண்ணீர் செல்ல முடியாமல் சாலையில் ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. அணை தண்ணீரும் மழை தண்ணீரும் சேர்ந்து சாலையில் ஓடும்போது, சாலை சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மரக்கிளைகளை அகற்ற பேரூராட்சி நிர்வாகமும், பொதுப்பணித்துறையும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பொதுமக்கள் நலன் கருதி கால்வாயில் கிடக்கும் ஆலமரகிளைகளை உடனடியாக
அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: