குளச்சல், ஜூன் 2: மண்டைக்காடு அருகே உள்ள மண்டைக்காடு புதூர் பகுதியை சேர்ந்தவர் சகாய ஆண்டனிராஜ். அதே பகுதியை சேர்ந்தவர் அமல்ராஜ். இருவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்னை இருந்து வருவதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று சகாய ஆண்டனிராஜ் பொருட்கள் வாங்க கடைக்கு சென்றார். அவர் ரேஷன் கடை அருகே சென்றபோது அங்கு வந்த அமல்ராஜிக்கும், சகாய ஆண்டனிராஜிக்கும் இடையே
மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து சகாய ஆண்டனிராஜிக்கு ஆதரவாக ஜான் போஸ்கோ, அனில்ராஜ் ஆகியோரும் அமல்ராஜிக்கு ஆதரவாக குமார், வினோ ஆகியோரும் வந்தனர். இதையடுத்து இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்டனர். இதில் காயம் அடைந்த அமல்ராஜ், ஜான் போஸ்கோ ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையிலும், அமல்ராஜ் குளச்சல் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து இருதரப்பினரும் தனித்தனியே கொடுத்த புகாரின் பேரில் மண்டைக்காடு போலீசார் இருதரப்பை சேர்ந்த 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
