- தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
- கோயம்புத்தூர்
- கோயம்புத்தூர் கார்ப்பரேஷன்
- ஆணையாளர்
- சிவகுரு பிரபாகரன்
- இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர்
- மாநில பொதுச் செயலாளர்
- தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் கூட்டணி
கோவை, ஜூன் 2: கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில், நேற்று அவரை கோவை மாநகராட்சி கமிஷனர் அலுவலகத்தில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாநில பொதுச்செயலாளர் அரசு நேரில் சந்தித்தார். அப்போது, அவர் கோவை மாநகராட்சியின் அனைத்து பள்ளிகளுக்கும் மாணவர்களின் கலைத்திறனை ஊக்குவித்து கற்பிக்க சிறப்பு ஆசிரியர்களை நியமனம் செய்தது, மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் நோக்கில் மழலையர் வகுப்புகள் தொடங்கியது, பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தது, மாணவர்களின் அறிவுக்கூர்மையுடன் சதுரங்கம் விளையாட ஆன்லைன் மூலம் பயிற்சியளித்தல் உள்ளிட்ட பல முன்னேற்றங்களை கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கொண்டு வந்ததாக நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்து கொண்டார். மேலும், புதியதாக பொறுப்பேற்கும் ராமநாதபுரம் மாவட்டத்திலும், கல்வித்துறையில் பல்வேறு முன்னேற்றத்திற்கு வழி வகுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
