புதுடெல்லி: நடப்பாண்டுக்கான ஜேஇஇ அட்வான்ஸ்டு நுழைவுத்தேர்வு கடந்த மாதம் 17ம் தேதி இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது. 1,87,389 மாணவர்கள் தேர்வெழுத பதிவு செய்திருந்த நிலையில், 1,79,694 மாணவர்கள் இரண்டுதாள்களையும் எழுதினர். இந்நிலையில் ஜேஇஇ அட்வான்ஸ்டு நுழைவுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. அதன்படி, 56,880 மாணவர்கள் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். டெல்லி மண்டலத்தை சேர்ந்த பீகார் மாணவர் சுபம் குமார் என்ற மாணவர் 360க்கு 330 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் வென்றுள்ளார்.
