மதுரை: மதுரை சோழவந்தானில் அரசுப் பேருந்து ஓட்டுநரை தவெக நிர்வாகி கத்தியால் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 55 அரசு பேருந்துகளை இயக்காமல் ஓட்டுநர், நடத்துநர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசுப் பேருந்து ஓட்டுநர் பிரசாத்தை தாக்கிய தவெக நிர்வாகி தனுஷ்கோடி மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
