கோவை சிறுமி கொலை – 2 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம்

கோவை: கோவை சிறுமி கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. கோவையில் உள்ள சூலூரில் 10 வயது சிறுமி கடந்த 21-ம் தேதி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார். இது தொடர்பாக இருவர் மீதும் போக்சோ மற்றும் கடத்தல் பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

போலீசார் கைது செய்ய சென்ற போது தப்பிச்செல்வதற்காக வீட்டின் 2-வது மாடியில் இருந்து கீழே குதித்ததில் கார்த்தியின் கை, கால் முறிந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மோகனை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இருவர் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மோகன்ராஜ் மற்றும் கார்த்திக் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்ததுள்ளது. மேற்கு மண்டல காவல்துறை தலைவர் ஜி.ஜி ரம்யா பாரதி பரிந்துரையின் பெயரில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார் உத்தரவு பிறப்பித்தார்.

Related Stories: