தவெக எம்எல்ஏ தலையீட்டால் ஜாதி அடிப்படையில் வீடு ஒதுக்கப்பட்டுள்ளதாக புகார்

சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சுப்புபிள்ளை தோட்டத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய சார்பில் ரூ .11 கோடி செலவில் ஏறத்தாழ 2,700 குடியிருப்புகள் கட்டிமுடிக்கப்பட்டு கடந்த மார்ச் மாதம் அப்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. தேர்தல் அறிவிக்கப்பட்ட காரணத்தினால் வீடுகள் ஓதுக்கீட்டாளருக்கு வழங்கும் பணி தடை பெற்றது.

இதனிடையில் புதிய ஆட்சி அமைந்த சூழ்நிலையில் கட்டிமுடிக்கப்பட்ட வீடுகளை ஒதுக்கீடு செய்வதில் ஜாதி பாகுபாடு காட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வாரிய வீதிமுறைகளின் படி இவ்வாறான புதிய குடியிருப்புகளில் உள்ள வீடுகள் குலுக்கல் முறைகளில் ஒதுக்கப்படுவது வழக்கம்.

கடந்த திமுக ஆட்சியிலேயே அப்பகுதியில் வசிக்கும் குறிப்பிட்ட சமூகத்தினர் பட்டியலின மக்கள் குடியிருக்கும் குடியிருப்புகளில் தங்களுக்கு வீடு வேண்டாம் என்றும் தங்களுக்குக்கென்று ஒரு ப்ளாக்கை தனியாக ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் அன்றைய அமைச்சர் மா. சுப்பிரமணியன் அதனை மறுத்துள்ளார்.

ஆனால் புதிய ஆட்சி பொறுப்பேற்ற பின் சைதாப்பேட்டை தவெக எம்எல்ஏ அருள் பிரகாசம் வழியாக மீண்டும் அதே கோரிக்கை முன்னெடுக்கபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தனியாக குழுக்கள் நடத்தி ஒரு குறிப்பிட்ட ப்ளாக்கில் குடியேற முயற்சிகள் நடப்பதாக அந்த குடியிருப்பு வாசிகள் குற்றசாட்டி வருகின்றனர்.

இவை சாதிவாதிகளின் நவீன தீண்டாமை என குடிருப்புவாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனிடையே அரசு குடியிருப்பு வழங்குவதில் சாதியை பாகுபாடு காட்டுவதாக எழுந்த குற்றச்சாட்டிற்கு முன்னாள் அமைச்சர் மா. சுப்பிரமணியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related Stories: