×

கல்லூரி மாணவி குளிப்பதை ஜன்னல் வழியாக வீடியோ எடுத்த தவெக நிர்வாகி சிறையிலடைப்பு

 

ஸ்ரீபெரும்புதூர், மே 26: கல்லூரி மாணவி குளிப்பதை ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த தவெக நிர்வாகியை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். குன்றத்தூர் ஒன்றியம் மணிமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட, மணிமங்கலம் பெரிய காலனி பகுதியை சேர்ந்தவர் தியாகு (32). தவெக நிர்வாகி. இவருக்கு திருமணமாகி, மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், தியாகு வீட்டின் அருகில் வசித்து வரும் கல்லூரி மாணவி குளிப்பதை ஜன்னல் வழியாக செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அந்த மாணவி மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, மணிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கல்லூரி மாணவி குளிப்பதை ஜன்னல் வழியாக செல்போனில் வீடியோ எடுத்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து தியாகுவை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கல்லூரி மாணவி குளிப்பதை ஜன்னல் வழியே வீடியோ எடுத்து ரசித்த தவெக நிர்வாகி கைது செய்யபட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags : Sriperumbudur ,Thiyaku ,Manimangalam Periya Colony ,Manimangalam ,Panchayat ,Kundrathur Union ,Thaveka ,
× RELATED காஞ்சிபுரம் மாவட்டத்தில் குடிநீர்,...