×

அண்ணியிடம் தவறாக நடக்க முயன்ற மைத்துனர் கைது

திருப்போரூர், மே 25: கேளம்பாக்கம் அருகே அண்ணியிடம் தவறாக நடக்க முயன்ற மைத்துனரை போலீசார் கைது செய்தனர். கேளம்பாக்கம் அடுத்த படூர் துலுக்காணத்தம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் (40). இவரது மனைவி அம்மு (35). இவர்களது வீட்டின் மற்றொரு பகுதியில் சுரேஷின் சகோதரர் வெங்கடேசன் (38) உள்ளிட்ட நால்வரும் தனித்தனியே வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் வெங்கடேசன் என்பவர் தனது சகோதரர் சுரேஷ் வீட்டில் இல்லாத நேரங்களில் வீட்டிற்கு வெளியே நின்றபடி தன்னிடம் ஆபாசமாக பேசுதல், ஆபாச வீடியோக்களை காட்டுதல் உள்ளிட்ட பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாக அவரது அண்ணி அம்மு கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags : THIRUPORUR ,KALAMBAKKAM ,Suresh ,Padur Dulukanathamman Temple Street ,Kelambakkam ,Amu ,
× RELATED காஞ்சிபுரம் மாவட்டத்தில் குடிநீர்,...