×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குடிநீர், மழைநீர் குறித்து புகார் எண்கள் அறிவிப்பு

காஞ்சிபுரம் மே 25: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் திடக்கழிவு மேலாண்மை, குடிநீர் விநியோகம், மழைநீர் கால்வாய், சொத்து வரிவிதிப்பு, கழிவு நீர் நச்சுத்தொட்டி சுத்தம் செய்தல் (செப்டிக் டேங் கிளீனிங்), பாதாள சாக்கடை, பிறப்பு (ம) இறப்பு சான்றிதழ் ஆகிய நகர்புற உள்ளாட்சி அமைப்புகளின் பல்வேறு சேவைகள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் வெளியாகியுள்ளன.

பொதுமக்கள் பயன்பெறும் வகையில் காஞ்சிபுரம் மாவட்த்திற்குட்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான இலவச புகார் அளிக்கும் தொலைபேசி எண்கள்: காஞ்சிபுரம் மாநகராட்சி – 14420, 1800 4252801 (ம) 044 -27231975, ஸ்ரீபெரும்புதூர் நகராட்சி 8056325819, மாங்காடு நகராட்சி – 044 26792592, குன்றத்தூர் நகராட்சி – 044 24780755 ஆகியவை ஆகும். மேற்குறிப்பிட்ட இலவச தொலைபேசி எண்களை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களின் குறைகளை உள்ளாட்சி அமைப்புகளுக்கு தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா கேட்டுக் கொண்டுள்ளார்.

 

Tags : Kanchipuram district ,Kanchipuram ,
× RELATED அண்ணியிடம் தவறாக நடக்க முயன்ற மைத்துனர் கைது