×

தையூர் சகாய மாதா ஆலயத்தில் தேர் பவனி

திருப்போரூர், மே 25: கேளம்பாக்கம் அடுத்த தையூரில் சகாய மாதா ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தேர்பவனி நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த வாரம் கொடியேற்றத்துடன் விழா தொடங்கிய நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாதா தேர் பவனி நேற்று நடைபெற்றது.

நேற்று மாலை 6 மணிக்கு கோயில் ஆலயத்தில் தொடங்கிய தேர் பவனி கோயில் மான்யம், ஏரிக்கரை தெரு, தையூர் புதிய காலனி உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. விழாவில் ஏராளமான கிறிஸ்தவர்கள், உடன் சென்று மாதாவை வழிபட்டனர்.

 

Tags : Sahayya Mata Temple ,Taiyur ,Thiruporur ,Kelambakkam ,Mata Ther Phavani ,
× RELATED காஞ்சிபுரம் மாவட்டத்தில் குடிநீர்,...