மகளிர் தொழிற் பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு: மாவட்ட கலெக்டர் பிரதாப் தகவல்

 

திருவள்ளூர், மே 26: அரசினர் மகளிர் தொழிற் பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் பிரதாப் தெரிவித்துள்ளார். இது குறித்து கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை, அம்பத்தூர், அரசினர் மகளிர் தொழிற் பயிற்சி நிலையத்தில் தொழிற் பிரிவுகளின் இருக்கைகளை நிரப்புவதற்கு https://skilltraining.tn.gov.in/detitiadm/ என்ற இணையதளம் வாயிலாக சேர்க்கை நடைப்பெற்று வருகிறது. இதில், 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் சேரவோருக்கு வயது வரம்பு இல்லை.

மாத உதவித்தொகை ரூ.750, இலவச பஸ் பாஸ், மிதிவண்டி, பாட புத்தகங்கள், வரைபடக் கருவிகள், 2 செட் சீருடை, மூடு காலணி மற்றும் சிறந்த தொழிற் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்கப்படும். மேலும், 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கு தமிழக அரசு வழங்கும் உயர்கல்வி உதவித்தொகை ரூ.1000 கூடுதலாக வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் 8வது, 10வது மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்று சான்றிதழ், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், ஆதார் அட்டை, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தக நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் – 5 ஆகியவற்றை நேரில் எடுத்து வர வேண்டும்.

சேர்க்கை கட்டணமாக ஓர் ஆண்டு தொழிற்பிரிவிற்கு ரூ.235 மற்றும் 2 ஆண்டு தொழிற்பிரிவிற்கு ரூ.245 பெறப்படும். இந்நிலையில், 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தையல் தொழில் நுட்பம் பிரிவிற்கும், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அழகு சாதனவியல் உள்ளிட்ட பிரிவுகளுக்கு 1 வருடமும், மேலும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு கட்டிடப் பட வரைவாளர் பிரிவிக்கு 2 வருடமும் பயிற்சி அளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் 94440 17528, 96296 66279, 97897 59825, 95660 58460, 63816 82005, 98403 85562 என மாவட்ட கலெக்டர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

 

Related Stories: