திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 4 சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல இன்று முதல் கட்டணமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலில் உள்ள தூண் பாறை (Pillar Rocks), குணா குகை (Guna Caves), பைன் மரக்காடுகள் (Pine Forests), மற்றும் மோயர் சதுக்கம் (Moyer’s Point) ஆகிய சுற்றுலா தலங்களை கட்டணமின்றி காணலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இந்த சுற்றுலா தளங்களில் ஒரே முறை நுழைவு கட்டணம் QR Code மூலம் வனத்துறையினர் வசூலித்து வந்தனர். QR Code டிக்கெட்டாய் பரிசோதனை செய்வதில் கடந்த 20 நாட்களாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் பெரிது அவதி அடைந்தனர்.
இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் இந்த போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக இன்று முதல் வருகிற மே 31ம் தேதி வரை சுற்றுலா பயணிகள் கட்டணம் இல்லாமல் கண்டு ரசிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் சரவணன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். வனத்துறையின் சுற்றுலா தலங்களை கட்டணம் இல்லாமல் கண்டு ரசிக்கலாம் என்ற அறிவிப்பு சுற்றுலா மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
