அரவக்குறிச்சி, மே 23: அரவக்குறிச்சி அருகே கத்தியை காட்டி பணம் பறித்தவரை போலீசார் கைது செய்தனர். அரவக்குறிச்சி ராஜூ நகரை சேர்ந்தவர் சரவணன் (49). இவர், அரவக்குறிச்சியில் இருந்து பள்ளப்பட்டி செல்லும் சாலையில் நேற்று முன்தினம் இரவு தனது டூ வீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சிறுநீர் கழிப்பதற்காக வண்டியை விட்டு கீழே இறங்கிய போது அங்கு மறைந்திருந்த பள்ளப்பட்டி அர்ஜுனா தெருவை சேர்ந்த லெனின் (29) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி சரவணனை மிரட்டி பணம் கேட்டுள்ளார். இதனால் பதற்றம் அடைந்த சரவணன், தன்னிடம் இருந்த ரூ. 300 லெனினிடம் கொடுத்துள்ளார். பணத்தை பறித்த உடன் லெனின் அங்கிருந்து தப்பிய ஓடியதாக தெரிகிறது. இது தொடர்பாக அரவக்குறிச்சி போலீசார் லெனின் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
